திருமணம் என்னும் நிக்காஹ்
ADDED :1641 days ago
இரு மனம் இணைவதே திருமணம். இது நம்மை ஒழுக்கமாக வாழ வழிவகுக்கிறது.
திருமணம் பற்றி நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.
* உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புண்டு.
* பொருளுக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்தால் பாவம் உண்டாகும்.
* இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ள பெண்களைத் திருமணம் செய்தால், நலமான வாழ்வு அமையும்.
* குறைந்த செலவில் செய்யப்படும் திருமணமே சிறந்ததாகும்.
* பெண் வீட்டாருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. திருமண விருந்தை மணமகனே ஏற்க வேண்டும். இதற்கு ‘வலிமா’ என்று பெயர்.
* கணவனும், மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.