உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிரந்தரமான வீடு இதுவே...

நிரந்தரமான வீடு இதுவே...

                                                    
சிலர் சொந்த வீடு வாங்க முடியவில்லையே என வருத்தப்படுவர். ஆனால் வீடு கட்டியவர்களோ வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறுவர். வாடகை வீட்டில் இருந்தாலே சந்தோஷப்படுங்கள். ஏனெனில் இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானதே.  
போதகரான சாமுவேல் பவுல் மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது அருகில் உள்ளவரிடம், ‘‘சகோதரரே! இந்த வீட்டைப் பாருங்கள். எவ்வளவு கேவலமாக இருக்கிறது. இதற்காக வருத்தப்படவில்லை. ஏனெனில், நான் செல்லவிருக்கும் பரலோகத்திற்கு இந்த வீடு ஈடாகாது. அலங்காரமான மாளிகையான விண்ணுலக வீட்டிற்கு நான் கிளம்புகிறேன். அது ஆண்டவரால் நிரந்தரமாக தரப்படும் இலவசவீடு’’ என்று சொல்லி கண்களை மூடினார்.             இந்த உண்மை புரியாமல் நாம் உலக வாழ்க்கை மீது அதிக ஆசை வைக்கிறோம். நிரந்தரமான வீட்டில் நாம் குடியிருக்க நற்செயல்களை செய்வோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !