கலசாபிஷேகம் நிகழ்ச்சிகள் குருவாயூர் கோவிலில் துவக்கம்!
ADDED :4854 days ago
குருவாயூர்: கலசாபிஷேக நிகழ்ச்சிகள் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் துவங்கின. கேரளா, திருச்சூர் மாவட்டம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் மூலவரை தவிர, பிற சன்னிதிகளில் கலசாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதையடுத்து, நேற்று முன்தினம் அய்யப்பன் சன்னிதியில் இதற்கான நிகழ்ச்சிகள் துவங்கின. இன்று அய்யப்பனுக்கு திரவிய கலசாபிஷேகம் நடக்கும்.இதை நாராயணன் நம்பூதிரி நடத்தி வைப்பார். இன்று மாலை கணபதிக்கு திரவிய கலாசாபிஷேகம் நடைபெறும். 24ம் தேதி அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை பகவதிக்கு நிகழ்ச்சி துவங்கி, 26ம் தேதி காலை அபிஷேகத்துடன் கலசாபிஷேக நிகழ்ச்சிகள் முடிவுறும்.