உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன்கோயில் கொடிமரத்திற்கு தங்கதகடுகள் பதித்திட 5 கிலோ வழங்கப்பட்டது

வைத்தீஸ்வரன்கோயில் கொடிமரத்திற்கு தங்கதகடுகள் பதித்திட 5 கிலோ வழங்கப்பட்டது

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோயில் கொடிமரத்திற்கு தங்கதகடுகள் பதித்திட 5 கிலோ தங்கம். சாஸ்த்ரா பல்கலைகழகம் சார்பில் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி,நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன்,தன்வந்திரி சுவாமிகள்  அருள்பாலிக்கின்றனர் இந்நிலையில் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு  தங்க தகடுகள் பதிக்கும்  திருப்பணியை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகம் வேந்தர் சேதுராமன் செய்திடும் வகையில் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கினார். இந்த 5கிலோ தங்கத்தினை பல்கலைகழகம் வேந்தர் சேதுராமன் ஏற்பாட்டின்படி அவரது மகன் வைத்தியசுப்ரமணியன் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருகைபுரிந்து கற்பகவினாயகர்,சுவாமி, அம்பாள், செல்வமுத்துகுமார சுவாமி,அங்காரகன் சுவாமி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகளிடம் வழங்கினார்.இந்த தங்ககட்டிகள் தகடுகளாக பதிக்கும் வகையில் முலாம் பூசிட பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளது.இந்த பணியை டைட்டன் நிறுவனம் ஏற்று செய்துவருகிறது.இப்பணிகள் சுமார் 40நாட்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !