பழநி மலைகோயிலில் கூட்டம்
ADDED :1726 days ago
பழநி: பழநியில் ஊரடங்கு தளர்விற்குப் பின் கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் நடமாடினர். நீண்ட வரிசையில் வின்ச் ஸ்டேசனில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். வின்ச், படிப்பதை வழியே பக்தர்கள் மலை மீது சென்று பழநி ஆண்டவரை தரிசித்தனர். கிரி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.