திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் கோவில் ராஜகோபுரம் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் உண்ணாமுலை அம்மன் உடனாகிய ஆதி அருணாசலேசுவரர் திருக்கோயில் அடிஅண்ணாமலை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி விக்கனஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி யாகசாலை பிரவேசம், யாக ஆரம்பம், முதல்கால யாக பூஜை துவங்கியது. நேற்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் பரிவாரமூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம். மற்ற பூர்ணாஹுதி, யாத்ராதானாம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் சகல் விமானங்களுக்கும் காலத்தில் மஹாகும்பாபிஷேகம், சுவாமி-அம்பாள் (மூலவர்) மஹாகும்பாபிஷேகம் நடைபெறறது. பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.