உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜா கோயில் கருவறை மேற்கூரை ஓலை புதுப்பிப்பு

நாகராஜா கோயில் கருவறை மேற்கூரை ஓலை புதுப்பிப்பு

 நாகர்கோவில் : நாகர்கோவில் நாகராஜா கோயில் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டது.கோயில் கருவறையில் நாகருக்கு குளிர்ந்த காலநிலை வேண்டும் என்பதால் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு வருகிறது.இங்குள்ள மண்புற்றில் தலா ஆறு மாதம் கறுப்பாகவும், வெள்ளையாகவும் வரும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்க பெண்கள் நாகருக்கு பால் ஊற்றி வழிபடுவது இக்கோயின் சிறப்பாகும்.கருவறையின் மேற்கூரை ஆண்டுதோறும் ஆடி மாதம் புதுப்பிக்கப்பட்டு புதிய ஓலை வேயப்படுகிறது. ஆடி கார்த்திகை தினமான நேற்று மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, பூஜாரிகள் புதிய ஓலை வேய்ந்தனர். கொரோனா மூன்றாம் அலை அச்சுறுத்தலால் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !