சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடி மரம் நாட்டல்!
போடி: போடி சுப்பிரமணியசுவாமி கோயில் ஜூலை 5-ல் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி கொடி மரம் நடப்பட்டது.போடி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ல் நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் கோபுரங்கள், ஆலயம் கட்டும்பணி நடந்து வருகிறது. கோயிலில் கொடிமரம் நடும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் மற்றும் திருப்பணிக்கமிட்டி தலைவர் பழனிராஜ், கவுரவத்தலைவர் முத்துவீர சுருளியம்மாள், தக்கார் சுதா, பெரியகுளம் கைலாசநாதர் கோயில் பொறுப்பாளர் ஜெயபிரதீப், போடி சுப்பிரமணியர் கோயில் திருப்பணிக்குழு நிர்வாகஸ்தர்கள் தியாகராஜன், டாக்டர் வேல்ராஜ், கண்ணன்,. வக்கீல் ராஜ்மோகன், ஏலவிவசாயிகள் சங்க தலைவர் சுப்பிரமணி, மெய்யப்பன், பெருமாள், யுனைடெட் இன்டியா இன்சூரன்ஸ் மேலாளர் ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள், வர்த்தகர்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை சோமஸ் கந்த குருக்கள் செய்திருந்தார்.