உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக மக்கள் நன்மைக்காக ஜகன்நாதர் ரத யாத்திரை!

உலக மக்கள் நன்மைக்காக ஜகன்நாதர் ரத யாத்திரை!

சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சேலத்தில் நேற்று ஜகன்நாதரின் ரத யாத்திரை நடந்தது.ஒடிஸா மாநிலத்தில் நடத்தப்படும், பூரி ஜகன்நாதரின் ரத யாத்திரையில் உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இஸ்கானின் முயற்சியால், உலகம் முழுவதும் உள்ள பெரிய நகரங்களிலும், இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. உலக மக்கள் நன்மைக்காக, இஸ்கான் சார்பில், நேற்று சேலத்தில் ஜகன்நாதரின் ரத யாத்திரை நடைபெற்றது. பட்டைக்கோவில் அருகில் இருந்து மாலை 3 மணிக்கு பிரமாண்ட ரத யாத்திரை தொடங்கி, சின்னக்கடைவீதி, கலெக்டர் அலுவலகம், நான்கு ரோடு, புது பஸ் நிலையம், ஐந்து ரோடு வழியாக சோனா கல்லூரியை சென்றடைந்தது.இதில் பங்கேற்ற பக்தர்கள் குழுவினர் பிரார்த்தனை பாடல்களும், கீர்த்தனங்களும் இசைத்தனர். சோனா கலையரங்கத்தில், மாலை 6.30 மணிக்கு பஜனை, உபன்யாசம், நாடகம், பிரசாதம் வினியோகம் ஆகியவை நடந்தது.நிகழ்ச்சியில், சோனா கல்லூரி தலைவர் வள்ளியப்பா, செயலாளர் திரஜ்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !