உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் பக்தஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் பக்தஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி. எம்., நகரில் உள்ள பக்தஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பத்மாவதி தாயார், வெங்கடாஜலபதிபெருமாள், லட்சுமி நரசிம்மர், தும்பிக்கையாழ்வார், பக்தஆஞ்சநேயர் தெய்வங்களுக்கு நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாள் வாஸ்துபூஜை, பூர்ணாகுதி, தீபாரதனை நடந்தது. இரண்டாம் நாள் காலை புண்யாகஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்வாசனம் அஷ்டபந்தன மருந்துசாற்றுதல் ஆகியவை நடந்தது. நேற்று காலை நாடிசந்தனம், பிராயச்சித்த ஹோமம், தீபாரதனையை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்தது. கோபால கிருஷ்ணபட்டாச்சார்யார் கும்பாபிஷகத்தை நடத்திவைத்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். மேனேஜிங் டிரஸ்டி ஜி. ஹரிதாஸ், டிர ஸ்டி பி.ராமலிங்கம், தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !