உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் திருப்பணி 5 கோடி ரூபாய் மதிப்பில் முடிந்துள்ளது. கிழக்கு ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், தொண்டரடிப்பொடி பிரகாரம், சக்கரத்தாழ்வார் சன்னிதி, ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. தாயார் விமானத்திற்கு, 2 கோடி ரூபாய் மதிப்பில், தங்க தகடுகள் வேயப்பட்டுள்ளது. மூலவர் சன்னிதி புதுப்பிக்கப்பட உள்ளது.கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை அமைப்பதற்காக, நேற்று காலை 9 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, வேதங்கள் ஓத, பந்தல்கால் நடப்பட்டது. கோவில் உதவி ஆணையர் தியாகராஜன் கூறும்போது,""நூறு ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்து விமானங்களுக்கும், கோபுரங்களுக்கும், ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள், அடுத்த மாதம் முதல் தேதி துவங்க உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !