சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4853 days ago
திருப்புத்தூர்:திருப்புத்தூர் தாலுகா ஆபீஸ் வளாகத்தில் சித்தி விநாயகர்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர்,மாணிக்க விநாயகர்,பாலமுருகன், ஆஞ்சநேயர், நவகிரக மூர்த்திகள், விஷ்ணு துர்கை, கருமாரியம்மன், சரஸ்வதி, காமாட்சியம்மன், தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு திருப்பணி நடந்தது. கடந்த 19 ல் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. ஆதி திருத்தளிநாதர் கோயிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டன.நேற்று காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.