உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்

விழுப்புரம்: பிடாகம் குச்சிப் பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழுப்புரம் அடுத்த பிடாகம் குச்சிப்பாளையம் முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகள் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு திருக்குடம் ஞான உலாவும், 9.45 மணிக்கு கோவில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு விநாயகர், முருகர், முத்துமாரியம்மன், கங்கையம்மன் கோவிலில் உள்ள கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமி திருமடம் சிவஞானதேசிக சுவாமி, திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டார் திருமடம் அம்பலவாண சுவாமி மற்றும் மேலைமங்கலம் பாலயோகி ராமதாஸ் சுவாமி திருமடம் குமாரசாமி தம்பிரான் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !