முத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா
ADDED :1581 days ago
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பாரதிநகர் முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை கோவிலில் வைத்து வழிபாடு செய்த பக்தர்கள் பின்பு, ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்தனர். பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திகடன் நிறைவேற்றினர்.