இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1522 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆடி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மத்தியபுரி அம்மனுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட , இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று (6ம் தேதி) பிரதோஷம் என்பதால், நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.