உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய சேதுக்கரை கடற்கரை

ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய சேதுக்கரை கடற்கரை

திருப்புல்லாணி : கொரோனா கட்டுப்பாட்டால் ஆடி அமாவாசையில் பக்தர்கள் நீராட அனுமதியில்லாததால் சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

ஆடி அமாவாசையில் புனித தலங்களில் நீராடி முன்னோரை வழிபட்டால் அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். திருப்புல்லாணி, சேதுக்கரையில் அமாவாசையில் ஏராளமான பக்தர்கள் தர்பணம் செய்து வழிபடுவர். ஆனால் இந்தாண்டு, கொரோனா கட்டுப்பாட்டால் ஆடி அமாவாசையில் பக்தர்கள் நீராட அனுமதியில்லாததால் சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை, திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !