உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தடை உத்தரவை மீறி ஆஞ்சநேயர் கோயிலில் திதி கொடுத்த பொதுமக்கள்

தடை உத்தரவை மீறி ஆஞ்சநேயர் கோயிலில் திதி கொடுத்த பொதுமக்கள்

நிலக்கோட்டை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தடையை மீறி பொதுமக்கள் திதி கொடுத்தனர்.

அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக திதி கொடுக்க போலீசார் தடை விதித்திருந்தனர். ஆனால் பொதுமக்கள் தடை உத்தரவை கண்டுகொள்ளாமல் கோயில் வளாகத்தில் திதி கொடுத்து ஆற்றில் நீராடினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூறியும் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை. தமிழக அரசு ஏற்கனவே கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக இருந்ததை பார்க்க முடிந்தது. மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் கூடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !