ஆடி அமாவாசை திருச்சி அம்மா மண்டபம் மூடல்
ADDED :1633 days ago
திருச்சி: ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கோவிட் பரவல் காரணமாக இந்த ஆண்டு நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அம்மா மண்டபம் படித்துறை மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவிரி படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய வருபவர்கள் திருப்பி அனுப்பபட்டனர்.