கருட வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்
ADDED :1632 days ago
பரமக்குடி : பரமக்குடியில் ஆடி அமாவாசை விழா சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடந்தது. கோயில் வளாகத்தில்பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அங்கு பக்தர்கள் இன்றி தீர்த்தவாரி நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர். இதே போல் எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள்கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.