ராமேஸ்வரம் கோயிலில் ராமர், சீதை உலா
ADDED :1520 days ago
ராமேஸ்வரம் : ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம்ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணர் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தனர். ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராட, கோயிலுக்குள் தரிசிக்க பக்தர்களுக்கு தடை விதித்ததால், அக்னி தீர்த்த கடற்கரையில் ராமர், சீதை லட்சுமணர் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ரத்தானது.நேற்று கோயில் வளாகத்திற்குள் தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை, லட்சுமணர் எழுந்தருளி 3ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின் கோயிலுக்குள் உள்ள குளத்தில் தீர்த்தவாரி சுவாமியுடன் குருக்கள் புனித நீராடி சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடத்தினர்.