ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சயன சேவை
ADDED :1563 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் 7ம் திருநாளில் சயனசேவை உற்சவம் பக்தர்களின்றி நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு கோவில் தெற்கு பிரகாரத்தில் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோலத்தில் எழுந்தருளினார். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். தீர்த்தகாரர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்தனர். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் பங்கேற்றனர். நாளை (ஆகஸ்ட் 11) காலை 9:05 மணிக்கு கோவில் வளாகத்திற்குள் தங்க தேரோட்ட வைபவம் நடக்கிறது.