ராமேஸ்வரம் கோயிலில் தங்க தேரோட்டம்
ADDED :1563 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆக.,1 முதல் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது.9ம் நாள் விழாவான நேற்று கோயில் ரதவீதியில் ஆடித் தேரோட்டம் நடத்த இருந்த நிலையில், கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக நேற்று கோயில் 3ம் பிரகாரத்தில் மின் அலங்காரத்தில் ஜொலித்த தங்க தேரில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருள கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். கோயில் ஊழியர்கள், சீர்பாதம் துாக்குபவர்கள் தேரின் வடத்தை இழுத்து பிரகாரத்தை வலம் வந்தனர்.