உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழா: அம்மனுக்கு அபிஷேகம்

தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழா: அம்மனுக்கு அபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உட்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும்,  அபிஷேகம் நடந்தது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடக்கும். இந்நிலையில் நாளை (11ம் தேதி) ஆடிப்பூரம் விழா என்றாலும், இன்று ஆடிப்பூரம் காலை 11.24 மணிக்கு துவங்கியதால், பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு, பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெரியநாயகி அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, கோவில் நுழைவாயிலில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், வாராஹி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !