உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் ஆடிப்பூரம் கோலாகலம்: பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

கோவில்களில் ஆடிப்பூரம் கோலாகலம்: பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

கோவை : கோவை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆடிப்பூரம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து அடிவாரத்தில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஆடி பூரம் வைபவத்தை முன்னிட்டு, ஆண்டாள் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. உடுமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள்,ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !