உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி வெள்ளி: கோவிலில் வாசலில் பக்தர்கள் வழிபாடு

ஆடி கடைசி வெள்ளி: கோவிலில் வாசலில் பக்தர்கள் வழிபாடு

உடுமலை : ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் நடைசாத்தப்பட்டதால் வாசலில் நின்று அம்மனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.உடுமலை கோயில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நெல்லுகடைவீதி செளந்திரராஜபெருமாள் கோவிலில் செளந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் மஞ்சள்பட்டுத்தி அருள்பாலித்தார். உடுமலை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கோவிலில் அனுமிக்கப்படவில்லை. வாசலில் நின்று அம்மனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !