உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை நடந்தது. இதையொட்டி சித்தருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முக்கந்தர் தெருவில் உள்ள சுயம்பு பத்திரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் அம்மனும், ஆதிசேஷனும் காட்சியளித்தனர். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !