உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொட்டிச்சி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு பூஜை

தொட்டிச்சி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு பூஜை

பெருநாழி: பெருநாழி அருகே திம்மநாதபுரத்தில் உள்ள அஷ்ட நாக கருட தொட்டிச்சி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி, நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு மகா யாக வேள்வி நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், சங்கல்பம், கும்ப பூஜை உள்ளிட்ட பூஜைகளும், மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. 1008 திவ்ய மூலிகைகளை கொண்டு உலக நன்மைக்கான சிறப்பு பூஜை நடந்தது. கோயில் நிர்வாகி சின்னாண்டி பூஜைகளை செய்திருந்தார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !