உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கிழக்குபுற மேற்கூரை அகற்றம்

கோவில் கிழக்குபுற மேற்கூரை அகற்றம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிழக்கு புறத்தில் 16 கால் மண்டபம் அருகே பக்தர்களின் வசதிக்காக 2010 - -11-ம் ஆண்டு பேரூராட்சியின் பொது நிதி 12 லட்சம் ரூபாய் செலவில் கூரை அமைக்கப்பட்டது.

கோவில் விசஷே நாட்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. தவிர, கிழக்கு புறத்தில் இருந்து கோபுரத்தை பார்க்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் அந்த கூரை அகற்றும் பணியில், நேற்று முன்தினம் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். அப்போது, ஹிந்துமுன்னணியினர் சிலர், கூரை அகற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நேற்று பேரூராட்சியினர் மீண்டும் பணியை துவங்கியபோது ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதை அடுத்து, கூரை பிரிப்பது நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !