கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் குரு பூஜை
ADDED :1615 days ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 24ம் ஆண்டு ஆடி சுவாதி சுந்தரர் குரு பூஜை விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 11.30 மணிக்கு சுந்தரருக்கு குரு பூஜை, 12.30 மணிக்கு மகேஸ்வர பூஜை மற்றும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. விழாவில் ஸ்ரீ வெண்ணை வேலவர் ஆன்மிக நற்பணி மன்றம் சார்பில், 50க்கும் மேற்பட்ட ஆன்மிக பக்தர்கள் சுந்தரர்தேவாரம் முற்றோதல் நடத்தி வழிபட்டனர்.சுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். வீடு வீடாக பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.