இம்மையில் நன்மையை செய்
ADDED :1625 days ago
இறந்தவர்களை இறைவன் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கிறான் என்று இப்ராஹீம் என்பவருக்கு சந்தேகம் வந்தது.
“நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய் என இறைவனிடம் கேட்டார்.
“நீ நம்பிக்கை கொள்ளவில்லையா” என்று கேட்டான்.
“நம்பிக்கை உள்ளது. எனினும் மனஅமைதிக்காகவே இவ்வாறு கேட்கிறேன்” என்றார்.
“நான்கு பறவைகளை பழக்கி உன்னுடன் இணங்கி இருக்கச் செய். பின் அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி அங்கிருக்கும் மலைகளில் வைத்துவிடு. பிறகு அவற்றை கூப்பிடு. அவை உயிரோடு உன்னிடம் வரும். இதன்மூலம் உன்னுடைய சந்தேகம் தெளிவாகும் என்றான்.
இதைகேட்ட இப்ராஹீமினின் மனம் அமைதியானது. அவரவர் செய்யும் நன்மை, தீமைக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் அமையும் என்ற தத்துவத்தை மக்களுக்கு பரப்பினார் இப்ராஹீம். எனவே நாமும் இம்மையில் நன்மையை செய்வோம்.