அனைவரும் சமம்
ADDED :1625 days ago
மெக்கா நகரிலுள்ள காபா புதுப்பிக்கப்பட்டபோது, அங்கு ஹஜருல் அஸ்வத் என்ற கல்லை முதலில் பதிப்பது யார் என்று சண்டை ஏற்பட்டது. நாளை காபாவுக்குள் முதலில் வருபவர் இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லட்டும் என முடிவு எடுத்து கலைந்து சென்றனர். மறுநாள் முதலாவதாக அங்கே நாயகம் வந்தபோது அவரிடம் இந்த பிரச்னையை கூறினர். அவரோ போர்வை ஒன்றை கொண்டுவர சொன்னார். போர்வையின் மீது கல்லை வைத்து அனைவரையும் போர்வையை துாக்க சொன்னார். அனைவரும் ஒற்றுமையுடன் போர்வையை துாக்கி கல்லை பதித்தனர்.
தலையை சீவ பயன்படும் சீப்பு எப்படி சமமாக இருக்கிறதோ, அதுபோல் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்.