உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி ஞானவிநாயகர் கோவிலில் ஆடி சுவாதி நட்சத்திர மகோற்சவம்

வலம்புரி ஞானவிநாயகர் கோவிலில் ஆடி சுவாதி நட்சத்திர மகோற்சவம்

 புதுச்சேரி: குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலில் ஆடி சுவாதி நட்சத்திர மகோற்சவத்தை யொட்டி மகா அபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி மாநில ஆதிசைவ சுந்தரமூர்த்தி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ஆடி சுவாதி நட்சத்திர மகோற்சவம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலில் நடந்தது.காலை 7:00 மணி முதல் 11:30 வரை விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஏகாதச ருத்ர ஜபம், மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை 6.௦௦ மணிக்கு, புதுச்சேரியை சேர்ந்த 5 சிவாச்சாரியார்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை, திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் வழங்கினார்.ஏற்பாடுகளை, டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !