உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா

சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா

 பரமக்குடி : பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 29 வது ஆண்டு ஆவணி மற்றும் பால்குடத் திருவிழா ஆக., 8 ல் காப்புக்கட்டுடன் தொடங்கி நடக்கிறது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர், உற்சவர் அம்மன் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து மாலை 6:30 மணி தொடங்கி மாதர் சங்கத்தினர் பஜனை பாடல்களை இசைத்த பின், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் குறைவான பக்தர்களுடன் விழா நடக்கிறது. நாளை பால் அபிேஷகம், திருவிளக்கு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !