சித்திவிநாயகர் கோவில் சிறப்பு பூஜை
ADDED :1595 days ago
சின்னாளபட்டி: ஆவணி பிறப்பை முன்னிட்டு கீழக்கோட்டை சித்திவிநாயகர் கோவில் ஐயப்பன் மணிமண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக திரவிய அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சரண கோஷத்துடன் 18 படி பூஜை, மகா தீபாராதனை நடந்தது. மோகன் குருசாமி தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.