முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :1874 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் வீடுகளில், வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நேற்று கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற முளைப்பாரிகளை அரசூரணி நீரில் கொட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். விழாவை முன்னிட்டு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீபம் இந்திய அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.