உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டதேவி கோயில் தேரோட்டம் பேச்சு வார்த்தை துவக்கம்

கண்டதேவி கோயில் தேரோட்டம் பேச்சு வார்த்தை துவக்கம்

தேவகோட்டை : சிவகங்கை தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழா, ஜூன் 24 ல் துவங்குகிறது. ஜூலை 2 ல், தேரோட்டம் நடக்கும். விழாவில் சுவாமி பல்லக்கு தூக்குதல், தேர் வடம் பிடித்தல் தொடர்பாக, சில ஆண்டுகளுக்கு முன், சர்ச்சை ஏற்பட்டது. தேரோட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை, நேற்று முன்தினம், கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடந்தது. எஸ்.பி., பன்னீர்செல்வம், கூடுதல் எஸ்.பி., சமந்த்ரோஹன் ராஜேந்திரா முன்னிலை வகித்தனர். இரவுசேரி, செம்பொன்மாரி பகுதிகளை சேர்ந்த நாட்டார்கள் பங்கேற்றனர். தென்னிலை, உஞ்சனை பகுதியினர் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !