3 நாள் கோவில் மூடல்: வெளியில் இருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
ADDED :1543 days ago
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மூன்று தினங்களுக்கு கோவில் மூடப்பட்டது. வெளியில் இருந்து பக்தர்கள்தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு உத்தரவுபடி இன்று 20ம் தேதி முதல் வரும் 22 ம் தேதி வரை கோவில்கள் மூடப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் வேலுார் மாவட்டம், வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், செல்லியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மூடப்பட்டு நடை சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு முன்பு நின்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், ராஜகோபுரம் முன் விளக்கு மற்றும் சூடம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டு சென்றனர்.