ஜூலை 3ல் ஆனித்திருவிழா
ADDED :4853 days ago
பெரியகுளம்:பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 3ல் சாட்டுதலும், ஜூலை 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும்விழா செயல்அலுவலர் சுதா தலைமையில் நடந்தது. அம்மனுக்கு பாலாபிஷேகம், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பூசாரிகள் சீனா, காமுத்துரை, ரமேஷ் தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, மண்டகப்படிதாரர்கள் சீத்தராமன், ரவீந்திரபாண்டியன், வீரமணி, தங்கம்முத்து பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் முருகன், அரிமா சங்க பொருளாளர் அய்யாச்சாமி, வர்த்தக பிரமுகர்கள் கனகராஜ், சந்திரசேகரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.