உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செண்டூர் கோவிலில் அக்னி வசந்த விழா

செண்டூர் கோவிலில் அக்னி வசந்த விழா

மயிலம்:மயிலம் அடுத்த செண்டூர் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 8ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. புலவர் ஆறுமுகபாரதி, உஷாஜெயராமன் குழுவினர் தினந்தோறும் பாரதம் படித்தனர்.கடந்த 14ம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு திருமண உற்சவமும், 20ம் தேதி கர்ண மோட்சமும், 21ம் தேதி காலை படுகளமும், மாலை தீமிதி விழாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !