திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வரலட்சுமி பூஜை
ADDED :1542 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வரலெட்சுமி பூஜை நடந்தது. இக்கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து சம்பிரதாயமாக வரலெட்சுமி பூஜையை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மகாலெட்சுமி அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் 18 பெண்கள் மட்டும் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. பூமாயி அம்மன் கோயிலில் காலையில் மூலவர் அம்மனுக்கு அபிசேகம் நடந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சிறப்புத்தீபராதனை நடந்தது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடந்தது.