உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வமுத்துகுமார சுவாமி கோவில் மகா கும்பாபிேஷக விழா

செல்வமுத்துகுமார சுவாமி கோவில் மகா கும்பாபிேஷக விழா

 புதுச்சேரி-குயவர்பாளையம் செல்வமுத்துகுமார சுவாமி கோவில் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.குயவர்பாளையம், சுப்ரமணியர் கோவில் வீதியில் அமைந்துள்ள முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துகுமார சுவாமி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது. மகா கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.மகா கும்பாபிேஷகம் நேற்று காலை 7:15 மணிக்கு நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மகா அபிேஷகமும், இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி ஜெகஜோதி மற்றும் ஊர் பிரமுகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !