பக்தியா... பணமா...
ADDED :1619 days ago
பூஜையறையில் கலசம் வைத்து விக்னேஸ்வர பூஜையுடன் விரதத்தை தொடங்க வேண்டும். சங்கல்பம், கலச பூஜை, பிராண பிரதிஷ்டை, தியானம், ஷோடச உபசாரம் (16 வகை பூஜை), லட்சுமி அஷ்டோத்ரம், பிரார்த்தனை, ஆரத்தி என அனைத்தையும் புரோகிதர்கள் மூலம் நடத்துவர். நோன்புக்கயிறை கட்டிக் கொண்டு மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று வஸ்திர தானம் செய்வர். பணவசதி இல்லாதவர்களால் பெரிய அளவில் பூஜை செய்ய முடியாது. எளிமையாக லட்சுமி குறித்த பாடல்கள் அல்லது ஸ்லோகங்களை பாடினால் போதும். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது பக்தி மட்டுமே!