உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின்றி பவுர்ணமி வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின்றி பவுர்ணமி வழிபாடு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு பக்தர்களின்றி நடந்தது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக பக்தர்கள் மலையேற விருதுநகர் கலெக்டர் தடை விதித்திருந்தார். இதனையடுத்து வத்திராயிருப்பு தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு ரோடுகளில் போலீசார் குவிக்கப்பட்டு பக்தர்கள் வருவதை கண்காணித்தனர். காலை கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் கோயிலில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பல்வேறு வகை அபிஷேகங்களுடன் பவுர்ணமி வழிபாட்டை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு, பேரையூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !