உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை வணங்குங்கள்

கடவுளை வணங்குங்கள்


வழிகாட்டுகிறார் வாரியார்

* தினமும் கடவுளை வணங்குங்கள்.
* உழைக்கும் மனம் இருந்தால் வளமுடன் வாழலாம்.   
* கோபம் வரும்போது கண்ணாடியை பாருங்கள். கோபம் பறந்தோடும்.  
* தர்மவழியில் சம்பாதித்த பணம் பல தலைமுறைக்கு உதவும்.  
* உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.
* பெரியவருக்கான அடையாளம் பிறரை குறை சொல்லாமல் இருப்பதே.  
* மண்ணின் தன்மையை பொருத்து மழைநீர் மாறும். அதுபோல் நண்பரின் தன்மை பொருத்து ஒருவரின் குணம் மாறும்.
* அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுங்கள்.  
* பணிவுதான் வெற்றியை தரும்.   
* மகிழ்ச்சி, கவலை அவரவர் மனதை பொறுத்தது.
* தன்னை வணங்காதவர்கள் மீது கடவுள் கோபப்படமாட்டார்.
* பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்க கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள்.   
* கடவுள் நமக்கு கொடுத்ததை ஏற்றுக்கொள்ளுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !