உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தை.,மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

சாத்தை.,மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வடக்குத் தெரு மகாமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் 3 நாட்கள் நடந்த மகாகும்பாபிஷேக விழாவில் கணபதி ஹோமம், கஜபூஜை, விஷ்ணுபூஜை, அம்பாள் பூஜை, மிருதுணிய ஹோமம், தீர்த்தவாரி, ஸ்ரீஅழகம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கல்கி, துர்க்கா, முப்பிடாரி பூஜையும், ஸ்துாபி ஸ்தாபனம், ஸ்தபதி ஹோம பூஜை, சுதர்சன ஹோமம், கலசபூஜை, தொடர்ந்து விமான கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம், மாரியம்மனுக்கு மகாஅபிஷேகம், அன்னதானம், சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் உள்ளிட்டவை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாசரவணன் தலைமையில் திருப்பணி, கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !