அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
ADDED :1476 days ago
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கீழ முத்தனம்பட்டியில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் ஜக்கம்மாள் கோயிலில் பவுர்ணமி பூஜை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். கிராம மக்கள் காப்புக்கட்டி விரதமிருந்து மஞ்சள் நீர் குடங்களை சுமந்து ஊர்வலம் சென்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டினர். விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் ஹிந்துமுன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு மொக்கராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ்குமார் ,ஒன்றிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ஆண்டிபட்டி நகர இளைஞரணி தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.