உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு

உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு

கோவை: கோவை டவுன்ஹால் அருகே மணிமேகலை வீதியில் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு 7:00 மணிக்கு கோவிலில் உள்ள மாகாளியம்மன் கண் திறந்ததாக தகவல் பரவியது. வழிபாட்டுக்கு மக்கள் திரண்டனர். சஞ்சீவ்குமார் என்ற பக்தர் கூறுகையில், ‘‘வழக்கமான பூஜைகளை நிறைவு செய்த கோவில் பூசாரி, அம்மன் கண் திறந்திருந்ததாக எங்களிடம் கூறினார். இதையடுத்து, சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டோம் , ’ ’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !