உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆக. 24 காலை சிலைஎடுப்பு, மாலை 6.00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை வழிபாட்டுடன் துவங்கியது. ஆக. 25 ல், இரண்டாம்கால, 3 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை நான்காம் காலபூஜைகளுடன் துவங்கி, காலை 9.35 மணியளவில் புனிதநீர் கொண்டு கோபுர கலசத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !