நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :1520 days ago
உத்திரமேரூர்: உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், நேற்று, மஹா சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதி - காஞ்சிபுரம் சாலையில், நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளுக்கு தனித்தனி சன்னதி உள்ளது.இக்கோவிலில் மஹாசங்கடஹர சதுர்த்தியையொட்டி, நட்சத்திர விருட்ச விநாயகருக்கு நேற்று மாலை, பல்வேறு நறுமணம் கமழும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.இதேபோல், காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில் உள்ள திருக்கச்சியம்பதி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.