கோதண்டராமர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :1869 days ago
செம்பட்டி : ஆவணி மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.